இ – சைக்கிள் வாங்கினால் சிறப்பு மானியம்..

மின்சார சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக டெல்லி அரசு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வெளியிட்டுள்ளார்.

இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும். மேலும், முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.

கட்டுக்கடங்காமல் எரிபொருள் விலை ஏறிவரும் சூழலில் பயணிகளை இ வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஊக்குவிக்கும் விதமாக டெல்லி அரசு இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/