உக்ரைனில் மருத்துவ மாணவர்கள்- ஆஸ்திரேலியாவில் கல்வியை தொடர அழைப்பு

உக்ரைனில் இருந்து இந்தியா மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வியைத் தொடரலாம் என அந்நாட்டின் முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி தெரிவித்துள்ளார்

விசா 4 ஆண்டு நீட்டிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் 97 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, படிப்பை முடித்த பின் பணி நிமித்தமாக 2 முதல் 4 ஆண்டுகள் வரை விசா நீட்டிக்கப்படும்.

கல்விநிறுவனங்கள், அரசின் பல்வேறுஉதவித் தொகை திட்டங்கள்மூலமாக ஆஸ்திரேலியாவில் கல்விச் செலவு 75 சதவீதத்துக்குமேல் குறைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை https://www.studyaustralia.gov.au/ என்ற அரசின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.