உடனே ஆக்‌ஷன் எடுங்க.. அரசுக்கு பெற்றோர் கோரிக்கை..!

தமிழகத்தில் சில மாதங்களாக, பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் அடாவடித்தனத்த்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் ,திண்டிவனம் வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர், சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கி, ஃபேன் ,சுவிட்ச் போர்டை சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், ‘மாணவர்களை கண்டித்தால் அவர்கள் அடியாட்களுடன் வந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மிரட்டுகின்றனர்.

தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும், மாணவர்களை ஒழுக்கப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/