உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!!

சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது

கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, உதயநிதியின் கார் தன்னுடைய கார் என்று நினைத்து, அதில் ஏற முயன்றார்.

அப்போது அவரது பாதுகாவலர்கள் இது நமது கார் இல்லை என்ற கூற, அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘ஓ அந்த வண்டியா, சாரி’ என்று கூறிவிட்டு, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.