எஸ் எம் எஸ், ஓடிபி கேட்பவர்களிடம் எச்சரிக்கை : சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போல அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

பான் காா்டு மற்றும் கேஒய்சி விபரம் அப்டேட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பான் எண் பிளாக் செய்யப்படும்

வங்கி கே ஒய்சி அப்டேட் செய்யவேண்டும் இல்லை என்றால் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் குறுந்தகவல்களை பொதுமக்கள் நம்ப கூடாது.

sms-ல் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசஜ் மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம்.

இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/