ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

புதுக்கோட்டை , நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும்

திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ஆம் தேதி தேரோட்டம் நடக்கும் ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !