ஏப்ரல் 14 சமத்துவ நாள்- முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர்.

அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்.

அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருச்சிலை நிறுவப்படும்” என அறிவித்தார்.