ஏப்.10 முதல் இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி.. மத்திய அரசு

இந்தியாவிலும் கொரோனாவின் 4-வது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன..

அதனால் ஜனவரி முதல் முதல் முன் கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது…

மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/