கண் விழித்திரையில் கொரோனா!!!

இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டிருப்பது நாம் அறிந்திருப்போம்

கொரோனா வைரஸ் எப்படி நுரையீரல் செல்களில் ஒட்டிக் கொண்டு பன்மடங்கு பெருகுகிறதோ, அதே போல் விழித்திரையிலும் பெருக்கிக் கொள்ளும் தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ளூம் தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

வைரஸ்கள் கண்களில் பெருக்கிக் கொள்வது இது புதிதல்ல என்றும் , ஏற்கெனவே வேறு சில வைரஸ்களும் இதுபோன்ற தன்மையை பெற்றிருந்ததாகவும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.

விழித்திரையிலேயே பெருக்கிக் கொள்ளும் தன்மை பெற்றிருப்பதால் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறுகின்றார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/