கனடாவில் பரவும் ஜாம்பி நோய்…

கனடாவில் ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மாகாணங்களில் மான்கள், கலை மான்கள், கடமான்கள் என மான்கள் இடையே வித்தியாசமான நோய் பரவுவதாக அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு எவ்வித சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து , அதிக உமிழ்நீர் சுரப்பு, அசாதாரண நடத்தை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிகுறிகளினால், இந்நோய் ‘ஜாம்பி நோய்’ என குறிப்பிடப்படுகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்ட விலங்களின் இறைச்சியை உண்பதாலும், பாதுகாப்பற் கையாள்வதாலும், மனிதர்களுக்கும் இந்த தொற்று பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/