‘காவல் உதவி’ புதிய செயலி – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட “காவல்  உதவி“  புதிய செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல்,

குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் “காவல் உதவி“ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.