குறைந்த விலையில் கச்சா எண்ணெய்!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது

ரஷ்யா இந்தியாவிற்கு பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர் தள்ளுபடி என்ற அளவிற்கு கச்சா எண்ணெய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்க ரஷ்யா முன்வந்துள்ளது .

இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.

கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.