மத்திய அரசு இந்தியாவில் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.
ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நில நடுக்கோடு ,இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கை கோள்களை ஏவ முடியும்.
இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது.
இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது.குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/