கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 861-ஆக சரிவு…!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் கடந்த சில தினங்களாக கொஞ்சம் ஏறுமுகம் கண்டது.

நேற்று இந்த நிலை மாறியது. நேற்று முன்தினம் 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1,054 ஆக சரிவு அடைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 861 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 11,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,71,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது