சகோதரியை சுமந்தபடி பள்ளியில் பாடம் பயிலும் மணிப்பூர் சிறுமி

மணிங்சிலு பாமேய், 11 வயது சிறுமி வகுப்பறையில், சகோதரியை மடியில் வைத்துக்கொண்டு பாடங்களை கவனிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்களான தனது சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்புடன், படிக்க வேண்டும் என உந்துதலும் உள்ளது

இவருக்கு இந்த பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர்.

இந்தச் சிறுமி குறித்த தகவல்களை பார்த்த பல தரப்பினரும், சிறுமியின் கிராமத்துக்கு ஓடிச் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

மணிப்பூர் அமைச்சர் ஒருவர், இந்தச் சிறுமியின் கல்விச் செலவு முழுமையையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.