சாப்பாடு விலை அதிரடியாக உயர்வு !!

உணவு பண்டங்களின் விலையும் 20 சதவீதமாக உயர்த்த ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக சென்னை ஓட்டல் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது உணவகத் தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அரிசி, பருப்பு மற்றும் சமைப்பதற்கான மூலப்பொருட்களின் அனைத்து விலையும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வின் காரணமாக ஹோட்டலில் உள்ள உணவுகளின் விலையும் உயர்கிறது. உதாரணமாக டீ விலை ரூ. 2 லிருந்து ரூ. 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இட்லி ரூ.30 க்கு விற்பனையானால் தற்போது ரூ.33 ஆக உயரும்.

பொங்கல், இட்லி மற்றும் பூரி போன்ற உள்ளிட்ட உணவுகளில் ரூ.5 உயரும் எனவும், சாப்பாடு மற்றும் பிரியாணி வகைகளில் ரூ.20 உயரும் எனவும் ஓட்டல் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்