சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று பேர் உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

செட்டிபுண்ணியம், அன்பு நகர் ரயில்வே கிராசிங்கில், ரயிலில் அடிபட்டு இறந்த மூன்று பேர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அன்பு நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மின்சார ரயில் மோதி மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர்

மது அருந்திவிட்டு, வீடியோ பதிவு செய்த போது, மின்சார ரயில் மோதியதில் மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/