சித்திரை விஷு பண்டிகை பூஜை: சபரிமலை!!

சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்

இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது.

நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. வரும் 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.