சீனாவில் புதிய உச்சத்தில் கொரோனா..

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாடுகளை மாகாண அரசு கடுமையாக்கி இருப்பதால் ஷாங்காய் மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதிய உணவு வழங்கப்படாததால் மன உளைச்சலில் இருந்து வந்த நபர் தனது மனைவியை தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

பல்வேறு இடங்களில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.