சென்னையில் விண்ணை தொட்ட விமான கட்டணம்!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

குறிப்பாக மும்பை, டெல்லி விமான கட்டணம் உயரத் தொடங்கியுள்ளது.

10 ஆயிரத்தை நெருங்கியுள்ள கட்டணத் தொகை, ஏப்ரல் நடுப்பகுதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு மும்பைக்கு 20 விமானங்களும், டெல்லிக்கு 19 விமானங்களும் உள்ளன. சென்னை விமான நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 40,000 உள்நாட்டுப் பயணிகளைக் கையாண்டு வருகிறது.