சென்னை-சேலம் இடையேயான பசுமைவழி சாலை

3 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் 8 ஆயிரத்து 301 கிலோ மீட்டர் நீளமுள்ள 22 பசுமைவழிச் சாலைகள் அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

நாடு முழுவதும் 22 பசுமைவழிச் சாலைகளில் தமிழகத்தில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமைவழிச் சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

சென்னை-சேலம் இடையிலான 277 கிலோ மீட்டர் நீளமுள்ள பசுமை வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை

இருப்பினும் திட்டமிட்டபடி 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பசுமைவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/