சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!!

காலிப்பணியிடங்கள்: Chennai Rajiv Gandhi Government General Hospital-ல் தற்போது தொலைபேசி இயக்குபவர் (Telephone Operator) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

தொலைபேசி இயங்குவதில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: விண்ணப்பதாரர் Level 8 படி குறைந்த பட்சம் ரூ. 19,5000/- மாத வருமானமாக பெறுவர்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் காலை 10.00 – 2.00 மணி வரை வழங்கப்படும். 7.4.2022 கடைசி நாள் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம்:

இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை – 3, அடுக்குமாடி கட்டிடம் 1, அறை எண் 115C.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/