சைக்கிளில் உணவு டெலிவரி : ட்விட்டர் கொடுத்த பரிசு..

இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட்டின் உதவியுடன் நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தனது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி மேனாக ராஜஸ்தானை சேர்ந்த துர்கா மீனா பணி புரிய இவர் ஆசிரியராக இருந்துள்ளார்.

கொரோனா நோய் காலத்தில் தனது வேலையை இவர் இழந்தார். தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக, சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொண்டார்.

இவர் சைக்கிளில் டெலிவரி செய்வதை கவனித்த ஆதித்யா ஷர்மா என்பவர் அவரைப் பற்றி முதன்முதலில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“தனக்கு தேவையானவற்றை வாங்குவதற்கான முன்பணத்தை உங்களால் தர முடிந்தால், மீதமுள்ள பணத்தை இ.எம்.ஐ மூலம் நானே செலுத்து விடுவேன், உங்கள் முன்பணத்தை வட்டியுடன் 4 மாதங்களுக்குள் திருப்பித் தருகிறேன்” என்று துர்கா கூறியதாக ஆதித்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேவையான பணம் மற்றவர்கள் அளித்த நிதியின் மூலம் கிடைத்து விட்டதாக ஆதித்யா கூறினார்.