ஜூன் 26ம் தேதி எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 549 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது

தேர்வுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு(டிகிரி தரம்) நடைபெற உள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது என டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/