ஜே.இ.இ. முதன்மை தேர்வு தேதிகள் மாற்றம்!

பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதுவது அவசியமாக்கியது தேசிய தேர்வுகள் முகமை .

நடப்பாண்டுக்கான ஜேஇஇ தேர்வுகள் குறித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும் .

இதன் முதல்கட்ட முதன்மைத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 20ம் தேதியில் இருந்து 29ம் தேதிவரை இந்த தேர்வுகள் நடைபெறும்

2ம்கட்ட முதன்மை தேர்வுகள் ஜூலை 21ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

முதல்கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிந்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/