டீசலில் இயங்கும் பேருந்துகள், ஆட்டோக்களுக்கு தடை!! மாநில அரசு

பீகார் மாநிலம் பாட்னாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது.

அதன் அடிப்படையில் டீசலை எரிபொருளாக இயங்கக் கூடிய ஆட்டோ மற்றும் பேருந்துகளை இயக்க தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டது.

அந்த ஆலோசனையின் முடிவில் டீசலைப் பயன்படுத்தி இயங்கும் ஆட்டோ மற்றும் பேருந்துகளை இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.