டெல்லியில் யோகா பெருவிழா கொண்டாட்டம்!

உலக சுகாதார தினமான இன்று , டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப்பட்டது.

காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை டெல்லி செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 பூங்கா பின்னணியில், யோகா பெருவிழா எனும் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

மத்திய மந்திரிகள் கிஷான் ரெட்டி, சர்பானந்தா சோனோவால் பல மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், பிரபல விளையாட்டு ஆளுமைகள், யோகா குருக்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/