ட்விட்டரில் ` எடிட்’ வசதி அறிமுகம்!!

சமூக வலைவளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று டிவிட்டர். இதனை தொடர்ந்து மேம்படுத்த பல அப்டேட்களை டிவிட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்ட பிறகு அதில் பிழைகளையோ, வார்த்தைகளையோ மாற்றங்கள் செய்ய முடியாது.

டிவிட்டர் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் , பதிவை திரும்ப மாற்றும் வசதி இருந்தால் பதிவில் நம்பகத்தன்மை இருக்காது எனவே இந்த வசதி இத்தனைகாலமாக செய்யப்படவில்லை.

வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஏப்ரல் 1 முதல் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்துவதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் முதல் கட்டமாக ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/