தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர்

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், வெள்ளிக்கிழமைதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/