தனி ஒருவராக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 5-வது சிப்காட் தொழிற்பேட்டைக்காக 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துகிறது.

தொழிற்பேட்டைக்காக விவசாய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதாக கூறி அந்த தொகுதி எம்எல்ஏயும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

கே.பி.முனுசாமி தனி ஒருவராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.