தன் கனவுகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கக் கூடாது : முதல்வர் ஸ்டாலின்

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளி விழாவில், அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின் விழாவில் பேசிய முதல்வர், ‘ யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்வி தான். திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம்.

பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும். தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கக் கூடாது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்,’என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், ‘குழந்தையின் எதிர்காலத்திற்கு கல்வி தான் ஏணிப்படி என்பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம் கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/