தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

#Breaking:தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மாவட்ட ஆட்சியர்களுக்கு மரு.செயலாளர் போட்ட உத்தரவு!

1 சதவீதத்திற்கு கீழே இருந்து கொரோனா பாசிடிவ் சுமார் 5 சதவீதத்திற்கு சென்றுள்ளது.

உ.பி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவிலும் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது.சர்வதேச அளவில் ஒமைக்ரான் வழக்குகளும் ஒரு நாளைக்கு 7.45 லட்சம் என்ற அளவில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வழக்குகள் ஒரு நாளைக்கு 25 ந்தாக இருந்த நிலையில் தற்போது 30 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் லேசாக உயர்ந்துள்ளன.

சுமார் 8 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பது,ஆபத்தை அதிகரிக்கும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/