தமிழகத்தில் பாம்பு பிடிக்க அனுமதி : வாவா சுரேஷ் பாராட்டு !!

குமரி,நாகர்காவு கோவில் விழாவில் கேரள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரும் சமூக ஆர்வலருமான வாவா சுரேஷ் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு பாம்பு பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது வரவேற்கதக்கது.

கேரளாவிலும் அரசு பாம்பு பிடிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்

பாம்புகளை பிடித்து அதில் இருந்து எடுக்கப்படும் விஷம் அதிபயங்கரமான கேன்சர் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை தான் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து உள்ளதாகவும்,அதில் 250 க்கும் மேற்பட்டவை ராஜநாகங்கள் ,இந்திய இராணுவத்தில் உள்ளவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் பயிற்சி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.