தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்!

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ், உக்ரைன்-ரஷியா போரை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவ தாக அரசு தெரிவித்தது.

கடந்த 14 நாளில் டீசல் விலை ரூ.8 அதிகரித்துள்ளது. இது தவிர சுங்க கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா உள்பட 7 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/