தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது.இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது.

இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.

முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார்.

சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/