தமிழ்வழி சான்றிதழ் பெற விரும்பும் -குரூப் 4 விண்ணப்பதாரர்கள்!!

குரூப்4 தேர்வு ஜூலை 24&ம் தேதி நடக்க உள்ளது . இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற 28ம் தேதிக்குள்ள விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்

இந்த தேர்வில் 20 சதவீத ஒதுக்கீட்டை பெற 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் தேர்வாளர்கள் பள்ளிகளில் தமிழ் வழி சான்றிதழ் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் தமிழ்வழி சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக தேர்வர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த சிக்கல்களை தீர்த்து வைக்க பள்ளிகல்வித்துறை உடனடியாக அதன் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனால் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/