தம்பி ஓரமா போ.. இறங்கி வாலிபால் ஆடிய முதல்வர்!

விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழுப்புரம் ,கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ் கலந்து கொண்டார்,அவரிடம் சமத்துவபுரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்.

சமத்துவபுரத்தில் உள்ளே இருக்கும் மைதானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். வாலிபால் மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருக்க சட்டென முதல்வர் ஸ்டாலின் உள்ளே சென்று அவர்களுடன் விளையாட தொடங்கினார்.

முதல் பந்தை முதல்வர் ஸ்டாலின் சர்வ் செய்ய ஆட்டம் தொடங்கியது

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/