திடீர் மின்தடை ….அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தது.

மின்தடை குறித்து மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டனர். அதற்கு அதிகாரிகள் , மின்தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்

தமிழகத்தில் திடீர் மின்தடை ஏன்..? அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் ‘மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம்’ திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இன்று (நேற்று) இரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதை சமாளிக்க நமது மின்வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்துள்ளோம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/