திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தம்!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 12ம்தேதி சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இன்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது.

அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.12ம்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

12ம்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13ம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.