தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு..!

தைவான் கடற்கரை அருகே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.36 மணியளவில் ஹெங்சுன் நகருக்கு தென்கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் நில அதிர்வுச் செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/