கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது.
சித்திரை 6ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு சுவாமி திருக்கண் திறந்ததல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.
திருநங்கைகள் அழகிப்போட்டி ‘மிஸ் கூவாகம்’ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ளுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தங்களுக்காக வழங்குவதாகவும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/