நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.

தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை காஜல் அகர்வால் – கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/