நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !!!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக வடஇலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைப் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

நாகையில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.  ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திட்டச்சேரி பகுதிகளில் மிதமான மழைப் பெய்தது.

நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் குளிா்ந்த வானிலை நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

கனழையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை(ஏப்ரல்.11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.