நேட்டோ படைத்தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்?.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து வருகிறது. அந்நாட்டுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளிலிருந்து அளிக்கப்படும் .

ஆயுத உதவிக்களை தடுக்க நேட்டோபடைத் தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புடினின் படைகள் 2ஆம் உலக போருக்கு பிறகான மிகப் பெரிய ஆயுத ஓட்டத்தை தடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக நடைபெறும் போரில் நேட்டோ படைகள் ஜாவெலின் ஏவுகணைகளை வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.

இந்நிலைமை கெரில்லாப் போராக மாறக்கூடும், இவை ஐரோப்பிய யூனியனில் உறுதியற்ற தன்மையை உருவாகும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/