பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

பஞ்சாப் காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 1.75 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு, உத்தர பிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டது ,

கடந்த 3 நாட்களில் முடக்கப்பட்ட நான்காவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது.இணையவழி திருடர்கள் அந்த டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.