பாலக்காடு ரோடு மேம்பாலம் திறப்பு!!!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை, முதல்வர் காலை, 9:40 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழக – கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடான பொள்ளாச்சி – பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி – போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது.

இங்கிருந்த, ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, 2019ல் துவங்கப்பட்டது.

மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால், ரயில்வே கேட் நெரிசல் நீங்கியதுடன், மாற்றுப்பாதையில் நிலவிய நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.