பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு?

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறினார்.

இதற்காகவே 5 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும், தொழில்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படு வருவதாக கூறினார்.

ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பொன்முடி தெரிவித்தார்.

பாலிடெக்னிக் படித்து முடிக்கும் மாணவர்கள், வரும் கல்வியாண்டு முதல் Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திலும் B.E., B.Tech., படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது