பிரபல நடிகைக்கு அமைச்சர் பதவி!!

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய் . எஸ் . ஆர் . காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது .

இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என ஜெகன்மோகன் அப்போதே அறிவித்து இருந்தார் .

24 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் , இவர்களில் 10 பேர் உள்பட 25 அமைச்சர்கள் இன்று காலை 11.31 மணியளவில் முறைப்படி பதவியேற்க உள்ளனர் .

தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லையென அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்

புதிய அமைச்சரவை பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சில எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர் . இந்த சூழலில் இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது .