பீஸ்ட் டிரைலர் பற்றி ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

பீஸ்ட் டிரைலர் வெளியானதும் புதிய படத்தின் டிரைலரை பார்த்த எஃபெக்ட்டே இல்லை என ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விஜய் பீஸ்ட் டிரைலரில் காவியை கிழித்து அரசியல் குறியீட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் என போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது

அதே சமயம் படம் மணி ஹெய்ஸ்ட் காப்பி என்றும் மால் காப் காப்பி என்றும் கூர்கா படத்தின் காப்பி என்றும் அஜித் ரசிகர்கள் மீம்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விஜய்யின் வெறித்தனமான நடிப்பு ஒன்று போதும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைக்க என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வெள்ளை சட்டையில், சிகப்பு ரத்தம், தீவிரவாதிகளை அழிக்கும் காட்சிகள் என மற்ற எதுவுமே இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையா என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.