பீஸ்ட் படத்தின் கதை – கசியவிட்ட அமெரிக்க திரையரங்கு…

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் 13 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இந்தி டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி டிரெய்லரை பகிர்ந்த நடிகர் வருண் தவான், பீஸ்ட் இந்தி டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தெலுங்கு டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது. அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.

பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரியவருகிறது.

பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர். அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார்.

அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/